மத்திய கப்பல்படை ஊழியர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை கடத்த முயன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை கடத்த முயன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ‘சில்க் ஏர்லென்ஸ்' விமானத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கோவை விமானத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தனித்தனியாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்தவரும் மத்திய கப்பல்படை ஊழியரான செல்வமணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அவருடைய பேக்கில் தடைசெய்யப்பட்ட 14.5 கிலோ கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.1.5 கோடி. இந்தியாவில் விலங்குகளுக்கு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு,சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் போதைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இதனால், கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றை செல்வமணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், செல்வமணிக்கு உதவியாக இருந்த கோவை விமான நிலையத்தில் பணிபுரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் கோவையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்பு இருவரும் அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை, கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கடத்தல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது.அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார். விசாரணையின் இறுதியில் செல்வமணி, ராமகிருஷ்ணன் இருவர் மீதான கடத்தல் குற்றம் நிருபிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...