காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை - ஈஸ்வரன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். 

இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

காவிரி மேலாண் வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார கெடு கொடுத்த பின்பும் மத்திய அரசு அதனை செயல்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திப்பதாக முடிவெடுத்தும் அதற்கான அனுமதி கொடுக்காதது பா.ஜ.க.வின் உள்நோக்கத்தை காட்டுகிறது.

தமிழக முதலமைச்சர் நேற்று எதிர்கட்சி தலைவரை சந்தித்து பேசியுள்ளார். அனைத்து கட்சியினரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முயற்சித்து வருகிறோம்

கேரள அரசு சிறுவாணி தண்ணிரை தடுக்க அணை கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதை முழுமையாக எதிர்க்கும் நாங்கள் அதனை தடுக்க எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். 

கோவைக்கு சிறுவாணி தான் குடிநீர் ஆதாரம். தொடர்ந்து, அணையை தகர்த்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம். அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நினைதுக் கொண்டிருக்கிறோம். வடகிழக்கு மாகாணங்களில் பா.ஜ.க வெற்றி என்பது இந்தியா முழுவதும் தொடரும் என நம்பினால் அது அவர்களுக்கு ஏமாற்றம். திரிபுராவில் கம்யூனிஸ்டு கொள்கைகளுக்கு எதிராகத்தான் பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க தோற்றிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...