ஊட்டியில் ரூ.26 ஆயிரம் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி: ஊட்டியில் ரூ.26 ஆயிரம் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கள்ள் நோட்டுக்கள் அதிகம் புழங்குவதாக ஊட்டி நகர காவல் நிலையத்தில் தொடர் புகார்கள் எழுந்தன.
குன்னூர் பகுதியிலும் இந்த புகார் இருப்பதை அறிந்த போலீசார் கேஷ்பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தங்கியிருந்த கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் ராஜ் (28) என்பவர் அறையை காலிசெய்து சென்றுள்ளது தெரியவந்தது.
தகவலறிந்து அவரை தேடியபோது மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பிடிபட்டார்.
அவரை ஊட்டி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவரிடமிருந்த இருபத்து ஆறாயிரம் மதிப்புள்ள பதிமூன்று 2 ஆயிரம் ரூபாய், ஒன்பதாயிரம் மதிப்புள்ள 18 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரனை நடத்திய போலீசார் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.