17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் உட்பட இருவர் கைது

தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் அகல்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 10-ம் வகுப்பு வரை பயின்று வீட்டில் இருந்து வருகிறார்.

அகல்யாவை அதே பகுதியை சேர்ந்த வங்கி காவலாளி மோசஸ் (70) மற்றும் மனோஜ்குமார் (29) இருவரும் தனிதனியே அகல்யாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர் ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறப்படுகிறது. தனது மகள் பாலியல்பலாத்காரம் செய்யபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அகல்யா-வின் தந்தை தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக70 வயது முதியவர் மோசஸ் மற்றும் வாலிபர் மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தார்.

இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...