பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபர் கைது

கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி அஸ்மிதா (35). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். 

நேற்று காலை இவர்கள்து வீட்டிற்கு வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்மிதா-விடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர் அஸ்மிதா-வை கற்பழிக்க முயன்றார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்மிதா கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கூடி அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். 

பின்னர், அந்த வாலிபரை பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், வட மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (33) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்வதும் தெரியவந்தது. 

இதைடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...