காட்டு யானை தாக்கியதில் வனஅதிகாரி உயிரிழப்பு

கர்நாடகா மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் வன அதிகாரி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் வன அதிகாரி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.  



மைசூர் மாவட்டத்தில் தொட்டாபைரன் குப்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள ககனகோட் என்ற இடத்தில் உள்ள கபினி ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்ஹால் புலிகள் காப்பகத்தின் இயக்குநரும், வனப்பாதுகாப்பு அதிகாரியுமான எஸ். மணிகண்டனின் தலைமையில் வனஅதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அப்போது, ஜி.பி.எஸ். கருவியைப் பயன்படுத்தி வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை வனஅதிகாரிகளை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அதிகாரி மணிகண்டன் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் சக வன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...