முள்வேலியில் சிக்கிய கரடியை உயிருடன் மீட்ட வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்வேலியில் சிக்கிய கரடியை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்வேலியில் சிக்கிய கரடியை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர். 



கோத்தகிரி நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அவ்வப்போது வனத்துறையினர் கரடிகளை விரட்டியும், கூண்டுகளை வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கோத்தகிரி அருகே அரவேனு தவிட்டுமேடு பகுதியில் கரடி தனது 3 குட்டிகளுடன் தனியார் தேயிலை தோட்டத்தை கடக்க முயன்றது. 



அப்போது, அதில் ஒரு கரடி முள்கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கூறினர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல் முள்வேலியை வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். அப்போது, கரடி அங்கிருந்து தப்பிச் சென்றது. வனத்துறையினரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது என்றாலும், குடியிருப்பு பகுதியிலேயே கரடியை விட்டதால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலால் அப்பகுதியினர் அதிருப்தியடைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் கரடிகள் தாக்கி தம்பதியர் இருவர் உயிந்தனர். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...