கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் வண்ணப்பொடிகளை ஓருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டும், பாடல்களுக்கு நடனமாடியும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் வண்ணப்பொடிகளை ஓருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டும், பாடல்களுக்கு நடனமாடியும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆர்.எஸ்.புரம், சுக்ரவார் பேட்டை, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான வடமாநில மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இன்று ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹோலி பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வசந்த காலத்தை வரவேற்கும் விதமான வடமாநில மக்களால் இந்த ஹோலி பண்டிகையானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண, வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் பூசி மகிழ்ந்தனர். மேலும், வயது வித்தியாசமின்றி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உற்சாகமாக நடனமாடி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
