ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோதிருப்பூர்: திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ராஜ்குமார். இவரது மனைவி தங்கம்மாள். இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். இவர்களது மகன் விவேகானந்தன் (13). இவர் தாராபுரம் சாலையிலுள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த விவேகானந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விவேகானந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவன் விவேகானந்தன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், "சற்று காலதாமதமாக பள்ளிக்கு சென்றதால் என் ஆசிரியர்கள், பிரபாகரன், ரவி ஆகியோர் திட்டினர். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்." என்று எழுதப்பட்டிருந்தது.



இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக கூறி அவரது உறவினர்கள் தாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து, அங்கு வந்த ஊரக போலீசார் கட்டாயமாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...