ஆனைமலை புலிகள் காப்பக விடுதியில் தங்குவதற்கான இணையதள முன்பதிவு வசதி தொடக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இணையதள முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இணையதள முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, அரிய வகை வரையாடு மற்றும் இயற்கை சூழல் கொண்ட அரிய தாவரங்களும் உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு கடந்த 10 ஆண்டாக சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து பதிவு செய்யப்பட வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், இன்று முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் கணேசன் இதனை தொடங்கி வைத்தார். www.atrpollachi.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை உட்பட 6 வனசரகங்களில் உள்ள விடுதிகள் தங்கி இயற்கை அழகு, வனவிலங்குகள் கண்டு ரசிக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...