வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தீ விபத்திற்குக் காரணம் என்ன?: அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையர் உத்தரவு

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமாக வெள்ளலூர் பகுதியில் 650 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. தனியார் அடுக்குமாறு குடியிருப்புகள், காய்கறிகள் மார்கெட்டுகள் என பெறப்படும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.மற்ற பகுதிகளில் சேகரிக்கப்படும் 

மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்படாமல் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பையில் கடந்த சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் தீப்பிடித்தது. வானை நோக்கி எழுந்த கரும் புகையால் அப்பகுதியில் உள்ள மக்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர். இரண்டு நாட்களாக தீயணைப்பு படை வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தின் உண்மையான காரணங்கள் கண்டறியும் பொருட்டு, நேற்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் 5 மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

இக்குழுவில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் லட்சுமணன், கிழக்கு மண்டல செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த விசாரணைக்குழு தீ விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...