கல்லட்டி மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு போலீஸார் அறிவுரை

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை கல்லட்டி மலைப்பாதையாகும். இந்த மலைப்பாதையில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இரவு 9 மணிக்கு வாகனங்கள் செல்லவும், கனரக வாகனங்கள் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், உதகையை அடுத்த மசினகுடி பகுதியில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் திருத்தேர் விழாவை முன்னிட்டு நேற்று முதல் திருவிழா கோலாகாலமாக களைக் கட்டியுள்ளது. இதனையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க கல்லட்டி மலைப்பாதை வழியாக இரவு 9 மணிக்கு மேல் இரவு நேர போக்குவரத்திற்கு பல கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. 



மேலும், கல்லட்டி வாகன சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் 1 மற்றும் 2-வது கியரில் தான் செல்ல வேண்டும், வழிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது மற்றும் வழியில் யாரவது வாகனங்களை நிறுத்தினால் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். மேலும், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...