திருப்பூரில் வாலிபர் மர்ம மரணம் : கொலையா..? தற்கொலையா..? என விசாரணை

திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தாராபுரம் சாலையில் கரட்டாஙகாடு, தில்லை நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தந்தை முத்துச்சாமி மற்றும் தாயார் ருக்மணி ஆகியோரின் மகன் ரவி. இவரது தந்தை, தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ரவி தனது சகோதரி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இவர், கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் நேற்று இரவு கரட்டாங்காடு மெயின் ரோடு அருகில் ரவி மர்மமான முறையில் இறந்துள்ளார். காலையில் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருவதால் மேலே இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் திருப்பூர் தெற்கு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...