அணை கட்டுவதை தடுத்து நிறுத்துங்க

கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள். இந்த இரண்டு ஆறுகளுமே நமது அண்டை மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்குள் நுழைந்து, மீண்டும் மேட்டுப்பாளையம் மலைப்பகுதியினை அடைந்து சிறுவாணி ஆறு பவானியுடன் கலந்து தமிழகத்தை வந்தடைகிறது. 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அடிக்கடி அணையை கட்டி தண்ணீரினை தடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது கேரள அரசு. கடந்த ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சு கண்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் சுமார் 5 அடிக்கும் மேல் தடுப்பணைகளை கட்டி தண்ணீரினை தேக்கிவைத்துள்ளது. இதனைக் கண்டித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டது.



இதனால் கடந்த ஆண்டு கோவைக்கு குடி நீர் வழங்கும் பில்லூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், தற்போது கோட்டைத்துறை என்னும் இடத்தில் கேரள அரசின் சோலையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மேலும் ஒரு தடுப்பணையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

இது கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கோட்டத்துறை சிறுவாணி ஆற்றுப் பாலம் அருகே இடம் தேர்வு செய்து அங்கு மணல் மூட்டைகளை அடுக்கியும் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல வழியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தண்ணீர் வரத்து குறைவாக உள்ள நிலையில் இந்த தடுப்பணையும் கட்டப்பட்டால் பவானி ஆற்றில் நீர் வரத்து மேலும் குறைந்து விடும். இந்த பவானி ஆற்றின் நீரினை நம்பி 15 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தில் தண்ணீர் எடுப்பதில் சிக்கல் உண்டாகும். அத்துடன் மேட்டுப்பாளையம் முதல் பவானி சாகர், ஈரோடு என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி பலவனங்களாக மாறும் நிலை உருவாகும். எனவே தமிழக அரசும் தமிழக அரசு நிர்வாகமும் முதலமைச்சரும் உடனடியாக துரிதமாக செயல்பட்டு கேரள அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...