வெள்ளைப் பூண்டு விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

நீலகிரி: வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.



நீலகிரியில் அதிகளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுவை மிகுந்த நீலகிரி பூண்டுக்கு பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. கிலோவுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை மட்டுமே வெள்ளைப் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து மேலும் அதிகாரிக்கும் என்பதால் விலை வீழ்ச்சி தொடரும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் பிற மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பூண்டு விவசாயம் கை கொடுத்த நிலையில் தற்போது பூண்டு விலையும் வீழ்ந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இதனால் உதகை அருகேயுள்ள ஆடாசோலை, கடநாடு, காவிலோரை, எப்பநாடு, தொரையட்டி சுற்று வட்டாரத்தில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...