சிறுவாணி விவகாரம் : வாயில் கறுப்பு துணியுடன் விவசாயிகள் மனு

ஆழியாறு மற்றும் சிறுவாணி பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் சுமூகமான முடிவை எடுக்க வலியுறுத்தி இன்று வாயில் கருப்புத் துணி கட்டி வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவதிடம் மனு அளித்தனர்.


கோவை: ஆழியாறு மற்றும் சிறுவாணி பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் சுமூகமான முடிவை எடுக்க வலியுறுத்தி இன்று வாயில் கருப்புத் துணி கட்டி வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவதிடம் மனு அளித்தனர்.

ஆழியாறு அணையில் இருந்து 2.5 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழகத்தை ஒட்டியிருக்கும் எல்லையில் கேரள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக வாகனங்களை சேதப்படுத்தப்பட்டன. இதை கண்டித்து இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கருப்புத் துணியுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். 



அவர்கள் கூறுகையில், "சிறுவாணி, பில்லூர் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு வழங்கி வரும் நீர் வழிப்பாதைகளில் தடுப்பு ஏற்படுத்தி,கோவை மக்களின் குடிநீர் அளவீடு குறைந்து வருவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். கொங்கு மண்டல நீர் ஆதாரங்கள், குடிநீர் திட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஆய்வு செய்து பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். 

கேரள முதல்வர் பினராயி விஜயன் நதிநீர் குறித்து பேச தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளதை பயன்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சுமூகமான தீர்வை அளிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்புகள் நடைமுறைப்படுத்த மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்." என்றனர். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...