சிறுவாணி அணை விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண வைகோ வலியுறுத்தல்

ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.


கோவை: ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். ஆழியாறு பிரச்சனையை அரசு கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சனையை மையமாக வைத்து கேரளா அரசு சிறுவாணியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். 

அட்டப்பாடியில் ஆதிவாசி வாலிபர் மது-வை தாக்கி கொலை செய்தவர்கள் மீது பினராயி விஜயன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு சர்வாதிகாரி போல் உள்ளது. சங் பரிவார் அமைப்புகளின் ஊது குழலாக மோடி செயல்படுகிறார். எல்லா மட்டங்களிலும் இந்தியை மத்திய அரசு திணிக்கின்றது. பன்முக தன்மையை எல்லா விதத்திலும் சிதைக்கிறது. அ.தி.மு.க.,வை அரசியல் ரீதியாக மட்டும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதே நேரத்தில் முதலமைச்சர் இருக்கிற போது அரசு செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் இடைத் தரகரா அல்லது என்ற கேள்வி எழுந்துள்ளது." என்றார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...