சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மூடுதுரை மீனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கோகுல கண்ணன் ( 21) தமிழ்ச்செல்வன் (21) தமிழ்வாணன் (22). இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் நேற்று காரமடைக்கு சென்று கொண்டிருந்தனர். செங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார்(31), சித்ரா (38), தன்சிகா(6), சாவித்திரி ஆகியோர் அவர்களது இரு சக்கர வாகனத்தில் புளியம்பட்டி சென்று கொண்டிருந்தனர் .

அவர்களது வாகனம் மூடுதுரை பேருந்து நிலையம் அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஆனால், கோகுலக்கண்ணன், மகேஷ்குமார் மற்றும் குழந்தை தன்சிகா ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர், மற்ற மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...