மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகமாக வந்த பேருந்து ஒதுக்கியதில் கோபம் அடைந்த கணவன் மனைவி பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகமாக வந்த பேருந்து ஒதுக்கியதில் கோபம் அடைந்த கணவன் மனைவி பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் தினமும் போட்டி போட்டு அதிக வேகமாக ஓட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அடிக்கடி அந்த சாலையில் விபத்து ஏற்படுகிறது. பேருந்துகளின் போட்டிகளின் மத்தியில் அதிகம் பாதிக்கபடுவது இரு சக்கர வாகன ஓட்டிகள். இது மட்டுமில்லாமல் அதிவேகமாக ஓட்டும் பேருந்து ஓட்டுனர்கள் சாலையில் செல்லும்மற்ற வாகன ஓட்டிகளை ஒதுக்கிவிடுவதை வாடிக்கையாக்கிவிட்டனர். இதனால் அடிக்கடி பேருந்து ஓட்டுனர்களுக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.

அதே போல் இன்று மதியம் வடமதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கணவன் மனைவியை அதே வழியில் வந்த TN 38 N 2983 என்ற எண் கொண்ட (89B) அரசு பேருந்து சாலையில் இருந்து ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் கோபமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி பேருந்தை நிறுத்தம் வரை துரத்தி சென்று தவறை சுட்டி காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இதனால் கோபம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் அவர்களை தகாத முறையில் திட்டியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து பேருந்து பயணிகள் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவியை சமாதனபடுத்தினர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டி அர்னால்ட் கூறியதாவது:- இந்த சாலையில் தினமும் இது போன்ற வாக்குவாதங்கள் நடப்பது இயல்பாகிவிட்டது. சில நேரங்களில் வாக்குவாதம் முற்றி கைகலப்பிலும் முடிந்துள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேருந்துகளின் அட்டகாசங்களை கட்டுபடுத்த சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால் இன்னும் பேருந்து ஓட்டுனர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

நம்மை போல சாலையில் செல்லும் அனைவருக்கும் குடும்பங்கள் உள்ளது. அவர்களும் சக மனிதர்கள் என்பதை நினைத்து உயிர்களை மதித்து முறையாக வாகனங்களை இயக்கினால் அமைதியாக பயணிக்கலாம் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...