'பார்க் 2018' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பதானி

பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

கோவை : பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 



கணியூரில் உள்ள பார்க் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 

பார்க் குளோபல் பள்ளியில் பயிலும் மாணவி வைஷ்ணவியின் யோகா நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய, பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டி20 கிரிக்கெட் பயிற்சி முகாமில் 30 உறுப்பினர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்ட பி.சி.டி. மாணவர்கள் மூவரையும் பாராட்டினார். 

மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 15 வருடங்களாக, பல்கலைக்கழகம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெறும் மாணவரின் அந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை பார்க் கல்வி நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் நடைமுறை​யையும் அவர் அறிவித்தார். 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் ​பதானி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அப்போது, பேசிய அவர், பல இடங்களுக்குச் சென்று மாணவர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிப்பதனை தமது விருப்பமாகத் தெரிவித்தார். கல்விக்கு இணையாக விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...