ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது

கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் ஆண்டு தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு பி.ஏ.பி. திட்டத்தில் சராசரியை விட குறைவான மழையே பெய்தது. இதனால், கேரளத்திற்கு திறந்து விடும் நீரை தமிழக அரசு குறைத்தது. இதனைக் கண்டித்து கேரளா விவசாயிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.

நேற்று தமிழக-கேரள எல்லையில் கேரள எம்.எல்.ஏ கிருஷ்ணகுட்டி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இந்த திடீர் முற்றுகையையடுத்து நகைக்கடை மூடப்பட்டது.  தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...