நேரு உள் விளையாட்டு அரங்கில் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிதாக இரண்டு கோபுர விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை: கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிதாக இரண்டு கோபுர விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 



கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நான்கு கோபுர விளக்குகள் உள்ளன. இந்த நிலையில், மேலும் இரண்டு புதிய கோபுர விளக்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சென்னை கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சியின் பங்களிப்புடன் இந்த இரண்டு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்த 1500 முதல் 1700 லக்ஸ் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது முறை. முன்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப் பட்டிருந்த மின் கோபுரங்களில் ஒரு கோபுரத்தில் இருபது விளக்குகள் என நான்கு கோபுரத்திலும் சேர்த்து மொத்தம் 900 லக்ஸ் மின் ஒளி கிடைத்தது. தற்போது மாநகராட்சி மற்றும் சென்னை கால்பந்து அணி சார்பில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு கோபுரத்தில் 96 விளக்குகள் பொருத்தப்பட உள்ளதில் மேலும் 900 லக்ஸ் மின் ஒளி கிடைக்க பெற்று சர்வேதேச போட்டிகளில் பயன்படுத்தவதை போல செயல்படும். 



இந்த விளக்குகள் அமைக்கும் பணி வரும் 1-ம் தேதிக்குள் நிறைவு பெற்று, 2-ம் தேதி சென்னை கால்பந்து கழக அணி மற்றும் மின் வாரிய அணிக்கான போட்டி நடத்தப்படும்" என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...