குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கைகளை விட கைப்பேசிக்கு செவி சாய்க்கும் அதிகாரிகள்

திருப்பூரில் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அதிகாரிகள் கைப்பேசியில் கவனம் செலுத்துவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அதிகாரிகள் கைப்பேசியில் கவனம் செலுத்துவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வருகை தந்திருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ளதைப்போல, திருப்பூரிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்வெல் வாகனங்கள் வாங்கி, போர்வெல் அமைக்க உதவிட வேண்டும் எனவும், அதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் போர்வெல் அமைக்க குறைந்த செலவே ஆகும் என்றும் தெரிவித்தனர்.

அதேபோல, வெங்காயம் விலை வீழ்ச்சி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் எந்தெந்த வெளிநாடுகளுக்கெல்லாம் வெங்காயம் தேவைப்படுகிறதோ, அங்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



இது மாதிரியான தங்களது கோரிக்கைகளை விவசாயிகள் அடுக்கடுக்காக முன்வைத்துக் கொண்டிருக்கும் போது, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி குறிப்பெடுத்து அவர்களுக்கான பதிலை அளித்து வந்தார். ஆனால், விவசாயிகள் கோரிக்கையை சற்றும் செவி கொடுத்து கேட்காமல், வேளாண்மைத்துறை அதிகாரிகள் தங்களது கைப்பேசிகளில் சமூக வலைதளங்களில் தங்கள் கவனத்தை செலுத்தி வந்தனர். இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். 

ஏற்கனவே ஒருமுறை இதுபோன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கைப்பேசியில் கவனம் செலுத்தியிருந்து மாவட்ட ஆட்சியர் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...