ஏர்செல்லில் 60 சதவீத பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன : தென்மண்டல சி.இ.ஓ

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சிக்னல் இன்றி முடங்கி கிடந்த ஏர்செல் நிறுவனத்தின் பிரச்சனைகள் 60 சதவீதம் சரிசெய்யப்பட்டு விட்டதாக அதன் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சிக்னல் இன்றி முடங்கி கிடந்த ஏர்செல் நிறுவனத்தின் பிரச்சனைகள் 60 சதவீதம் சரிசெய்யப்பட்டு விட்டதாக அதன் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆப்ரேட்டர் சர்வீசராக இருந்தது ஏர்செல் நிறுவனம். கிராமங்களில் முதல் முதலாக டவர் அமைத்து செல்போன் இணைப்புகளை அளித்ததால், இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உருவாகினர். கோவை யம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தமிழக ஏர்செல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சர்வீஸ் வழங்கிவந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் அலைவரிசைகளை டவரோடு சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டு அங்கு செயல்பட்ட தனது கிளைகளை மூடியது.

தமிழகத்தில் ஏர்செல் தனது சேவையை வழங்கும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் அதன் வாடிக்கையாளர்கள் தவித்து வந்தனர். மேலும், ஏர்செல் நிறுவனத்தின் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ஏர்செல் முடங்கியதால், அதன் வாடிக்கையாளர்கள் போர்ட் உதவியுடன் வேறு தொலைதொடர்புக்கு மாறினர். மேலும், சிலர் நேரடியாக சென்று தங்களது நெட்வொர்க்கை மாற்றினர். இந்தப் பிரச்சனையால், கடந்த ஒருவாரத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏர்செல் நிறுவனம் இழந்தது. இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். 

இந்த நிலையில், தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் கூறியதாவது:- ஏர்செல் செல்போன் சேவை சீராகி வருகிறது. குத்தகைக்காரர்களுடன் ஏற்பட்ட சமரசப் பேச்சுக்குப் பின் முழுவீச்சில் செல்போன் டவர்கள் சீர் செய்யப்படும். 60 சதவீத பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விட்டன. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் முழுவதும் சரி செய்யப்பட்டு விட்டது. ஏற்கனவே, அறிவித்தது போல் இன்னும் 2 நாளில் நிலைமை சீரடையும். வாடிக்கையாளர்கள் மொபைல் போனை அனைத்து விட்டு மீண்டும் இயக்க வேண்டும். ஏர்செல் நிறுவனத்தை பயன்படுத்தபவர்கள் வேறு நிறுவனங்களை அணுக வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...