"பள்ளி மாணாக்கர்கள் கோவை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்"

கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலாவுடன், கோவை குறித்த வரலாற்றினை தெரிந்து கொள்வதும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலாவுடன், கோவை குறித்த வரலாற்றினை தெரிந்து கொள்வதும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.,23) சுற்றுலாத் துறையில் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலா செல்வதற்கான வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 150 பள்ளி மாணவ, மாணவியர்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்து, சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இன்று கோவை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் படிப்பில் சிறந்த ஏழை மாணவ, மாணவியர்களை சுற்றுலாத் துறையுடன், கல்வித்துறையும் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளன.

இச்சுற்றுலாவில், பள்ளி மாணவ, மாணவியர்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஜி.டி.நாயுடு தொழில்அருங்காட்சியகம், வனத்துறை அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி, குடிநீர் மற்றும் சுற்றலாவிற்கான பேருந்து வசதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சுற்றுலா பயணத்திற்கு மாணவ, மாணவியர்களை ஆபத்தில்லா இடங்களுக்கு அழைத்துச்செல்ல ஒவ்வொரு பேருந்திலும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்காக பங்கேற்பார்கள். சுற்றுலாவின் போது மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுலா சார்ந்த வினாடி, வினா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும். மேலும், இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இச்சுற்றுலாவில் தாம் பெற்ற அனுவத்தினை கருத்து படிவமாக மாணவ மாணவியர்களிடமிருந்து சேகரிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சதிஷ்குமார், மண்டல மேலாளர் உதகை மண்டலம் டாக்டர் என்.கே முரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜய்யண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...