ரூ. 76 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி தொடக்கம்

கோவை மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதியான குறிச்சி பகுதியில் ரூ.76 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதியான குறிச்சி பகுதியில் ரூ.76 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 



இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் மற்றும் மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு தண்ணீர் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தண்ணீர் ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை என்பதால், அதனைக் கருத்தில் கொண்டு தண்ணீரை தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம், அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் ஜெயலலிதா அரசால் கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயற்றப்பட்ட மகத்தான சாதனைத் திட்டங்களாகும். இத்திட்டங்களால் ஆண்டுகள் பல கடந்தாலும், இப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க இயலும். 

அதன்படி, புதியதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளான பிள்ளையார்புரத்தில் தொகுப்பு வீடுகளுக்கு அருகில் ரூ.4.75 கோடி மதிப்பில் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்தேக்க தொட்டியும், ரூ. 62 லட்சம் மதிப்பில் 2.50 லட்சம் கொள்ளளவு கொண்ட 2 இடங்களில் தரைமட்ட நீர்தேக்க தொட்டியும், ரூ. 62 லட்சம் மதிப்பில் அறிவெளி நகர், ஈடன் என்க்லேவியில் 2.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், கிருஷ்ணா நகர், (பண்டிட் நேரு பள்ளி அருகில்) மகேஷ்வரி கார்டன் பகுதியில் 5லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.97 லட்சம் மதிப்பிலும், குறிச்சி ஹவுசிங்யூனிட், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மைதானம் மற்றும் ஈச்சனாரி, மஹாலஷ்மி மந்திர் எதிரில் உள்ள, அய்யப்பா நகர் பகுதியிலும், வெள்ளலூர் ரோடு, முல்லை நகர் பத்மாலயா கார்தான் லே அவுட் பகுதியிலும், தலா 7.50 லட்சம் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.3.90 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட உள்ளது. 

இதேபோல, கார்மல் நகர் தெற்கு பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ. 2.38 கோடி மதிப்பிலும், முத்தையா நகரில் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ. 62 லட்சம் மதிப்பிலும், எல்.ஐ.சி., காலனி, பூங்கா அருகிலும், லோகநாதபுரம், ஆண்டாள் தோட்டம் அருகிலும் தலா 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.9.50 கோடி மதிப்பிலும், மாச்சம்பாளையம், துளசி கார்டன் பகுதியில் 12.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.2.04 கோடி மதிப்பிலும் என 12 பகுதிகளில் மேல்நிலைநீர்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகளைத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாக பொறியாளர் சம்பத்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...