கீரனூர் கும்பாபிஷேகத்துக்கு செல்கிறது கௌசிகா நதியின் புனித நீர்

திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது. 



கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக, குளத்துப்பாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம், காரைக்கால்பாளையம், கணபதிபாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம் சார்ந்த பகுதிகள் சார்பாக புனித நீர் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, வரும் 25-ம் தேதியன்று நடைபெறும் பூஜைக்கு புனித நதி தீர்த்தங்களுடன் கும்பாபிஷேக கலச பூஜை நடைபெறும். 



இந்த நிகழ்வுக்கு கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகில் உள்ள குருடிமலையில் உற்பத்தியாகும் கெளசிகா நதியில் தீர்த்தம் எடுத்துவர  குளத்துபாளையம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஆதி, தேவேந்திரன் மற்றும் 6 குலமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, குருஅருள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கௌசிகா நதி தீர்த்தக்குடங்கள் எடுத்துவரப்பட்டன.

மாபெரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நமது கெளசிகா நதி தீர்த்தமும் இடம்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், உறுதுணையாக  இருந்த  அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...