''மக்கள் நீதி மய்யம்" என்ற கட்சியை தொடங்கினார் நடிகர் கமல்

அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய நடிகர் கமலஹாசன், ''மக்கள் நீதி மய்யம்" என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.


அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய நடிகர் கமலஹாசன், ''மக்கள் நீதி மய்யம்" என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார். 



ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமலஹாசன் தொடங்கினார். கலாம் வீட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் பேரன் சலீம் அப்துல்கலாம் படம் பொறித்த நினைவுப் பரிசை கமலுக்கு வழங்கினார். அப்துல்கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து கமலஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார். இதனையடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், அவர் தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார்.

இந்நிலையில், கலாம் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார். “பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்”, என கமலஹாசன் பதிவிட்டுள்ளார். 



பின்னர், மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் கமல் பேசினார். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட அவர், மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்த நடிகர் கமல், ''மக்கள் நீதி மய்யம்" என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...