கோவை அருகே சோளத்தட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
கோவை : கோவை அருகே சோளத்தட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள காளிபாளையம் பகுதியில் ஒரு லாரி சோளத்தட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதிக பாரம் ஏற்றி சென்ற அந்த லாரி, சாலையின் அருகே இருந்த மின்கம்பியில் உரசியதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சோளத்தட்டுகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஒட்டுநர் லாரியில் இருந்து இறங்கி வெளியேறினார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இதனால், லாரி முற்றிலும் எரிந்து நசமாவது தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.