ஆவினில் கோடை கால மோர் மற்றும் தயிர் அறிமுகம்

கோவையில் உள்ள ஆவின் நிலையங்களில், கோடை கால மோர் மற்றும் தயிர் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் உள்ள ஆவின் நிலையங்களில், கோடை கால மோர் மற்றும் தயிர் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள ஆவின் அலுவலகத்தில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோடை கால மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளின் விற்பனையை ஆவின் பொதுமேலாளர் எஸ். செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



பின்னர், அவர் கூறியதாவது, 'கோடை கால வெயிலால் ஏற்படும் தாகத்தை தணிக்க, கோடை கால மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளோம். மிகக் குறைவான விலையில், இவை விற்கப்பட்டாலும், தரத்தில் மற்ற தயாரிப்புகளை விட சிறந்தவையாகும். நகரில் உள்ள அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களிலும், இந்த மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கலாம். மேலும், சிறப்பான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 1/2 லிட்டர் தயிர் பாக்கெட்டுகள், வருடம் முழுவதும் ஆவின் நிலையங்களில் கிடைக்கும், 200 மி.லி மோர் பாக்கெட் விற்பனை, வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து தொடரப்படும்' என்றார்.

200 மி.லி. மோர் பாக்கெட் ரூ.7-க்கும், 1/2 லிட்டர் தயிர் பாக்கெட் ரூ. 27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மோர் பாக்கெட் ரூ.5-க்கும், தயிர் பாக்கெட் ரூ. 22-க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...