மறைந்த தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கு விருது

தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கான விருது, மறைந்த முனைவர் ச. இராபினின் மனைவி சலோமிக்கு வழங்கப்பட்டது.

தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கான விருது, மறைந்த முனைவர் ச. இராபினின் மனைவி சலோமிக்கு வழங்கப்பட்டது.

முனைவர் இராபின், நெல்லில் பலஉயர் விளைச்சல் இரகங்களை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரின் “நெல் மரபியல் ஆராய்ச்சியின் பயனாக உயர் விளைச்சல் இரகங்களும் வீரிய ஒட்டுகளும் (கோஆர் எச்3 மற்றும் கோஆர் எச்4 ) வெளியிடப்பட்டுள்ளது. அவர் வறட்சியை தாங்கி வளரும் நெல் இரகங்களான பரமக்குடி 2, பரமக்குடி 3, மதுரை 5, டி.ஆர்.ஆர். தான் 40 மற்றும் உப்புத் தன்மையை தாங்கி வளரும் இரகமாக திருச்சி 2, வெள்ளத்தை தாங்கி வளரும் சி.ஆர் 1,009 சப் 1 ஆகியவையும், உயர் விளைச்சல் சன்ன இரகங்களான கோவை 48, கோ 49, கோ 50 கோ 51 மற்றும் கோ 52 இரகங்களையும் வெளியிட்டுள்ளார். 

கோ 51 சன்ன நெல் இரகத்தை பிரபலப்படுத்துவதில் இந்திய அளவில் முயற்சி எடுத்து 13 மாநிலங்களுக்கு அந்த நெல்லைப் பயிரிடுவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளார். தமிழகத்தில் கோ 51 இரகத்தை பயிரிட்ட ஒரு விவசாயி 18 டன்கள் மகசூல் எடுத்து சாதனை படைத்து தமிழக முதலமைச்சரிடம் கடந்த குடியரசுதின விழாவில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பரிசு பெற்றுள்ளார். 

முனைவர் ச. இராபின் (லேட்) அவர்களின் இந்த நெல் ஆராய்ச்சிகளின் சாதனைகளுக்காக முனைவர் இ.எ. சித்திக் பயன்னியம் விருது, மரபியல் துறை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் பிப்ரவரி 9, 2018 ஆம் ஆண்டு புது தில்லியில் வழங்கப்பட்டது. முனைவர் ஏ.கே. சிங், துறைத் தலைவர், முனைவர் பத்ம ஆர்.பி. சர்மா அன்னரின் சாதனைகளைப் பற்றிக் கூறினர். விழாவின் சிறப்பு விருந்தினர் கே.வி. பிரபு, சேர்மன், பி.பி.வி எப்.ஆர்.ஐ அவர்கள் விருதை ச. இராபின் அவர்களின் துணைவியார் சலோமி இராபினுக்கு வழங்கினார். விழாவில் பல முன்னோடி விஞ்ஞானிகள் பங்கு பெற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...