சி.பி.ஐ.(எம்) பேரணியில் போலீஸார் தடியடி : சிறுவன் உட்பட 6 பேர் படுகாயம்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியதில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.


தூத்துக்குடி : தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியதில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த 17-ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, இன்று மாலை செந்தொண்டர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய பேரணி எட்டையபுரம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் திடல் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், டூவிபுரம் ஐந்தாவது தெரு அருகே பேரணி சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் சாலையை கடக்க முயன்றுள்ளது. பேரணியில் சென்றவர்கள் காரை நின்று செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அது ஏ.டி.எஸ்.பி., வாகனம் என்பதால் வழி விடுமாறு போலீஸார் தெரிவித்தனர். ஆனால், வழி கொடுக்க மறுத்ததால், ஊர்வலத்தில் வந்த தோழர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீஸார் திடீரென தடியடி நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில், திருப்பூரைச் சேர்ந்த விமல் (23), அகிலேஷ் (5), திண்டுக்கல்லைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே, போலீஸாரை பேரணியில் கலந்துகொண்டவர்கள் தாக்க முற்பட்டனர். இதில், ஆயுத காவல் படைப் பிரிவைச் சேர்ந்த ராம்சுந்தர் (27), துரைராஜ் (32) ஆகியே இருவர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் அரைமணி நேரம் தாமதத்திற்கு பிறகு பேரணி மீண்டும் துவங்கியது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...