கோவையில் சுகாதாரமற்ற வீடுகள் மற்றும் கடைகளுக்கு இதுவரை சுமார் ரூ.6 லட்சம் அபராதம் விதிப்பு


தமிழக அரசின் உத்தரவின்படி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, டெங்கு தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரி ஹர்மந்தர் சிங் தலைமையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று (அக்.,23) கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட, தர்ஷினி நகர், கணபதி, வயலட் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஜி.என்.மில்ஸ், சுவாதி பூங்கா, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகுவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.23,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, மருதமலை ரோடு, வடவள்ளி, சின்மயா மெட்ரிக்குலேசன் பள்ளி வடவள்ளி, கவுண்டம்பாளையம், சரவணா நகர், வி.ஓ.சி நகர், டி.வி.எஸ் நகர், ஸ்ரீ பாலாஜி வித்யா மந்திர் வீரகேரளம், சீரநாயக்கன்பாளையம், காமராஜபுரம், ஆர்.எஸ்.புரம், வேலாண்டிபானையம், காந்திநகர், எஸ்.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.30,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆறுமுக உதயர் வீதி, தெலுங்குப்பாளையம், சொக்கம்புதூர், பிரபா டிரேடர்ஸ், கே.வி.பாளையம், போத்தனூர், மோகன் நகர், சுந்தராபுரம், மோகன் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.53,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.15,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டு, நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 22-ம் தேதி வரை டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான வீடுகள், பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி மூலம் மொத்தம் ரூ.4,89,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இன்று (அக்.,23) மேற்கொண்ட டெங்கு தடுப்பு பணிகளின் போது ரூ.1,22,000 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை ரூ.6,11,000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...