நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் இன்று (அக்.,23) நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புச் சுவர் உதவி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த அன்புச்சுவர் உதவி மையமானது மனிதாபிமானம் மற்றும் பகிர்ந்து வாழும் பண்பை வளர்க்கும் வகையில் துவக்கப்பட்டு உள்ளது தமிழகத்தில் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உதகையில் தொடங்கப்பட்டுள்ளது.
செல்வந்தர்கள் மற்றும் உதவி செய்யும் மனம் படைத்தவர்கள் தங்களிடம் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், காலணிகள் உட்பட இதர பயனுள்ள மக்களுக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் கொண்டு வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. பொருட்களை வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் வந்து எடுத்து சென்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதகை கோட்டாட்சியர் சிவகாமி, நகராட்சி ஆணையர்(பொ) ரவி, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, உதகை வட்டாட்சியர் மகேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.