உதகையில் அன்புச்சுவர் உதவி மையத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் இன்று (அக்.,23) நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புச் சுவர் உதவி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



 அப்போது அவர் கூறியதாவது, இந்த அன்புச்சுவர் உதவி மையமானது மனிதாபிமானம் மற்றும் பகிர்ந்து வாழும் பண்பை வளர்க்கும் வகையில்  துவக்கப்பட்டு உள்ளது   தமிழகத்தில் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உதகையில் தொடங்கப்பட்டுள்ளது. 

செல்வந்தர்கள் மற்றும் உதவி செய்யும் மனம் படைத்தவர்கள் தங்களிடம் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், காலணிகள் உட்பட இதர பயனுள்ள மக்களுக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் கொண்டு வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. பொருட்களை வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் வந்து எடுத்து சென்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதகை கோட்டாட்சியர் சிவகாமி, நகராட்சி ஆணையர்(பொ) ரவி, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, உதகை வட்டாட்சியர் மகேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...