கடந்த 55 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வந்த மத்திய கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 1962 -ம் ஆண்டு முதல் கோவையில் மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஜி.எஸ்.டி வரி மற்றும் சுங்கத்துறையும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 31-ம் தேதி வரை கோவையில் செயல்படும், மத்திய அரசின் கலால்துறை அலுவலகம், நவம்பர் 1-ம் தேதி முதல் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது. எஞ்சிய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் கோவையிலேயே செயல்பட உள்ளது.
இது தொடர்பாக, கோவை சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாசராவ் பேசுகையில், ”கோவையில் வரும் 31-ம் தேதி வரை மட்டுமே, சுங்கத்துறை அலுவலகம் செயல்படும். மத்திய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் தற்போதைய அலுவலகத்திலேயே இயங்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.