நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. அவரது, திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
பட நிறுவனத்தின் கணக்குகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும், திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நடிகரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை ஏதும் நடத்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.