டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.,23) டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய துப்புறவு, சுகாதாரப்பணிகள் தொடர்பாக ஹர்மந்தர்சிங் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறையின்படி, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்களை உண்டாக்கக்கூடிய ஏடிஸ் கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. மாவட்ட ஆட்சியர் மூலம் தினந்தோறும் அதிகாலை நேரங்களில் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களை இணைந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு துப்புறவு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் என்ற அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அமைத்து டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையானது பெரிய மருத்துவமனையாக உள்ளதாலும், அனைத்து வகையான உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாலும், அருகிலுள்ள மாவட்டங்களான திருப்பூர் நீலகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்து சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கென 24 மணிநேரம் ஆலோசனை மையமும், தனிக்கவனத்துடன் சிகிச்சை மேற்கொள்ள பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதுபோலவே, தனியார் மருத்துமனைகளிலும் பிரத்யேக வார்டுகள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநகர, நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளுதல், அபேட் மருந்து ஊற்றுதல் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பொது மக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குடும்பத் தலைவர் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டினுள் டெங்கு லார்வாக்கள் முழுவதும் நல்ல தண்ணீரில் மட்டுமே உருவாகுவதால் அவரவர் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குடங்கள், டிரம்கள், தொட்டிகள், தரைமட்ட தொட்டி (சம்ப்) திறந்து வைக்காமல் மூடி வைக்கவேண்டும். வீட்டில் உள்ள பிரிட்ஜ் மற்றும் ஏசியின்; பின்புறம் தேங்கி இருக்கும் நீரினையும், வீட்டின் மேல்மாடியில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஏதும் இல்லாமல், மழைநீர் தேங்க வாய்ப்பு இல்லாமல் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வீட்டின் சுற்றுப்புறத்தில், பிளாஸ்டிக் மற்றும் உடைந்த குடம், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் வாளியில் மழைநீர் தேங்காவண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். குளியல் அறையில் உள்ள தொட்டிகளில் டெங்கு லார்வாக வளரா வண்ணம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடரால் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டின் மாடியில் குடிநீர் தொட்டியில், நீர் நிரம்பியவுடன் வெளியேறும் குழாய் மற்றும் வெளியேறும் குழாய்கள் ஆகியவற்றை கொசு வலை மூலம் கட்டி கொசு உட்புகாவண்ணம் செய்தல் வேண்டும்.
தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு அவர்களுடைய உணவு விடுதி, கல்யாண மண்டபங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள், கட்டுமானப்பணி நடைபெறும் இடங்கள், தங்கும் விடுதிகள், கடைகள், மற்றும் அனைத்து வணிக ரீதியான கடைகளும் அவற்றின் மொட்டைமாடி பகுதியிலும், உட்பகுதியிலும், நீர் தேங்காவண்ணம் வாரந்தோறும் திங்கள்கிழமை பார்வையிட்டு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள இடங்கள் ஆகியவற்றை முழுமையாக துப்புரவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஹர்மந்தர்சிங், விளாங்குறிச்சி பகுதிகளில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார். பின்னர் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் வார்டு, மற்றும் இரத்தப்பரிசோதனை கூடங்களிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சை பிரிவு, டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவு, மற்றும் 24மணிநேர காய்ச்சல் ஆலோசனை மையம் ஆகியவற்றிலும், அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தின் சுற்றுப்புறத்திலும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மருத்துவமனையில் உள்ள இரத்த அணுக்கள் எண்ணும் கருவியினை பார்வையிட்டு, டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் இரத்த அணுக்களில் உள்ள பிளேட்லெட்கள் உடனுக்குடன் எண்ணப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.