மாநகராட்சிப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு வசதிகள்

பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண கழிப்பறைகளை உடல் ஊனமுற்றவர்களால் பயன்படுத்த முடியாது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் பள்ளி, கல்லூரிகளில் தங்களுக்கான கழிவறைகள் இல்லாத காரணத்தால் கல்வியை ஆரம்பத்திலோ, இடையிலோ நிறுத்திவிடுகின்றனர். 

மாற்றுத்திறனாளி மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவரவும், எந்த சிரமமும் இல்லாமல் அவர்கள் கல்வி கற்கும் நோக்கில் கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான 'ஸ்வர்கா பவுண்டேசன்' மற்றும் கோவை மாநராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து 'சுகம்யா பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு வசதிகளுடைய கழிவறைகள் மற்றும் சிறப்பு நடை மேடைகளை அமைக்கப்பட்டு வருகிறது.



கோவை மாநகரில் முதல்முறையாக மாநகராட்சி ஆணையரின் ஒப்புதலோடு கடந்த ஜுன் மாதம் ராமநாதபுரம், பாரத் நகரில் அமைந்துள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி அம்மணி அம்மாள் மகளிர் பள்ளியிலும், பி.என்.புதூர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் இந்த சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன.

மேலும், கணபதி, அரசூர் மற்றும் வாகராயம்பளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து 'ஸ்வர்கா பவுண்டேசன்' ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் கூறியதாவது, மாற்றுதிறனாளிகளுக்கும் சாதாரண மக்களைப்போல எல்லா வசதிகளும் அவசியம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைமேடையும், சிறப்பு கழிப்பறைகளும் கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தும் 'சுகம்யா பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களின் உதவியோடு, மாநகராட்சிப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவியாக சிறப்பு வசதிகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்.' என்றார்.



மேலும் அவர் கூறியதாவது, 'மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளைப் பிரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளைத் தேர்வு செய்து, இந்த வசதிகளை அமைத்து வருகிறோம். இதனால், அனைத்துப் பகுதியிலும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன்பெற முடியும். அடுத்தகட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு வசதிகள் உள்ள பள்ளிகளைப் பற்றி மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.' என்று கூறினார்.

'மருத்துவ முகாம், பொதுத்தேர்தல், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் போன்ற அரசு நிகழ்வுகள் மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான சிறப்பு வசதிகளுடைய கழிவறைகள் இல்லாதததால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சிறப்பு வசதிகள் பள்ளிகளில் உருவாக்கப்படுவதால், மாணவர்கள் மட்டுமின்றி எல்லா மாற்றுத்திறனாளிகளும் பயனடைகின்றனர்.' என்றார் ராமநாதபுரம், கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், கே.ரமேஷ்.

கல்வி கற்பதற்கு உடல் ஊனம் ஒரு தடையே இல்லை என்பதை மாற்றுத்திறனாளிகள் உணர்ந்திருந்தாலும், அவர்களுக்கு சாதகமான சூழல் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் காணப்படுவதில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் மாநகராட்சிப் பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படவேண்டும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...