கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இதில், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், ஜி.என்.மில்ஸ், தொண்டாமுத்தூர் மற்றும் நகர்புறங்களில் இருப்பவர்கள் நேரில் வந்து குறைகள் அடங்கிய மனுக்களை அளித்து வருகின்றனர்.
வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு நாளில் சுமார் 400 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக, இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்த போதிய வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், தங்களது வாகனங்களை, ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்த வேண்டிய நிலையில் மனுதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ரயில்நிலையம், அவினாசி சாலை செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெருக்கடியால் சிரமம் அடைகின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மனுதாரர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார் தகுந்த வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மனுதாரர் ஒருவர் கூறுகையில், ” வாரந்தோறும் திங்கட்கிழமை இந்தப் பிரச்சனையை சந்திக்கிறேன். ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே மற்றும் வெளிப்புற பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தகம் நிரம்பி வழிகிறது. வாகனங்களை நிறுத்த முறையான நிறுத்துமிடம் ஏதுமில்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி சமூக ஆர்வலர் ஆரோக்யராஜ் பேசுகையில், பணியாளர்களின் வாகனங்கள் மட்டுமே உள்ளே நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர்கள் நிறுத்த சிறிது இடமே ஒதுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முறையான இடத்தை வாகன நிறுத்தத்திற்கு ஒதுக்க வேண்டும். பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளன. எனவே, அதனை அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.