மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது

கோவை அருகே மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்த ஏ.எஸ். குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (38). பண்ணை தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (24). இவர் கோவைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-வது பட்டாலியன்)ல் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

தீபாவளி தினத்தன்று ஏ.எஸ். குளம் பேருந்து நிலையம் அருகே தமிழ்செல்வன், தனது சகோதரர் மோகன் பிரபாகரன் (26) மற்றும் 3 நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற நடராஜிடம் மரு அருந்த பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் மற்றும் அவரது சகோதரர் மோகன் பிரபாகரன் ஆகிய இருவரும் நடராஜை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக, நேற்று (வியாழனன்று) காலை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நடராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

பொதுமக்களை மது அருந்த பணம் கேட்டு மிரட்டியதோடு, தாக்கிய காவல்துறை அதிகாரியை கைது செய்த சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...