டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- விசிக தொல்.திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



"டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மத்திய ஆய்வுக்குழு பெயரளவிற்கு மட்டுமே சுற்றுப் பயணம் செய்து கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்தனர், டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேரள அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது. இதற்கு முன்னோடியாக தமிழகத்தில் ஏற்கனவே 206 பேருக்கு கடந்த திமுக அரசு சார்பில் ஆகம விதிகளின்படி அர்ச்சகராக நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பணி நியமனத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மெர்சல் படத்திற்கு எதிராக பாஜக போராடுவதை விடுத்து, அப்படத்திற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே சரியாக இருக்கும்.

கலைஞர் தன்னம்பிக்கை நிறைந்த தலைவர். கோபாலபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை காரில் பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல் நிலை முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...