குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகன தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்- துணை ஆணையர் பேச்சு


கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக கோவை மண்டல இரு சக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது:-

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் அனைவரையும் இணைப்பது மகிழ்ச்சி. கோவையில் இரு சக்கர வாகன உதவியுடன் பல குற்றங்கள் நடைபெறுகிறது.



முறைகேடான வாகன மாற்றங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த குற்றங்களை யாரிடம் கூறுவது என்பது போன்ற தயக்கம் இனி வேண்டாம். உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்.

செயின் பறிப்பு தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்கலாம்.



நீங்கள் அனைவரும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இணைந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அங்கீகாரத்தை உங்களுக்கு பாதுகாப்பாக உபயோகித்து குற்றவாளியாக மாறிவிட வேண்டாம். நீங்கள் தவறு செய்தால் காவல்துறையால் அதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் பேசினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...