பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத வார்டு மக்கள் அதிகாரிகளை அணுக வேண்டும் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுக் கழிப்பிட வசதியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  மேலும், நூறு வார்டுகளிலும் 100 சதவீத திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக துண்டுபிரசுங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் பலனாக, பொதுமக்கள் மாநகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில, காமராஜபுரம், லைட் ஹவுஸ் சாலை, சுப்ரமணிய சாலை, குனியமுத்தூர், சுந்தராபுரம், குறிச்சி, கோவைபுதூர், குனியமுத்தூர், சொக்கம்புதூர், செட்டிவீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் திறந்த வெளியில் மக்கள் மலம் கழிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு ரூ.600 அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

மேலும், நகரில் பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத மக்கள் அந்தந்த வார்டு அதிகாரிகளை அணுகி, பொதுக்கழிப்பறை செய்து தரக் கோரி மனு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...