பரோலில் உள்ள சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும் - தமிழிசை

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இருக்கின்றது. இது சாதரண சூழ்நிலையல்ல. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என தோன்றுகின்றது. டெங்கு காய்ச்சலை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கின்ற நிலையில் மத்திய அரசிடம் இருந்து டெங்கினை கட்டுப்படுத்த உதவிகளை தமிழக அரசு கேட்கலாம்.  என்றார். 

மேலும், உறுப்பு மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுவது குறித்து கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இடைதரகர்களின் செயல்பாடுகள் அதிகம் இருக்கிறது.  கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தின் தேவை குறைந்து இருப்பதால் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர். ஊழியர்கள் யாரும் வேலை இழக்க கூடாது என்பது தங்களின் நிலைப்பாடு.  என தமிழிசை கூறினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பரோலில் வந்திருப்பதால் அரசியல் மாற்றம் ஏற்படக்கூடாது. அரசியல் மாற்றம்  ஏற்படாது என்பது தனது கருத்து. சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை போலீஸார் கண்காணிக்க வேண்டும். 

கெயில் நிறுவன குழாய்கள் பதிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார். அதையும்மீறி பொதுமக்கள்  அச்சப்படுகின்றனர் என்றால் மக்களின் உணர்வுகள் குறித்து மத்திய அரசு பரீசிலக்கும். முடிந்த வரை விளைநிலங்களில் இல்லாமல் பொதுஇடங்கள் வழியாக குழாய் கொண்டு செல்ல வலியுறுத்துவோம். 

எதிர்கட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி ஏற்பின்போது எதிர்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்காதது குறித்து கேள்விக்கு தன் எதிர்ப்பினை நேற்றே பதிவு செய்தேன். ஆளுநர் பதவி ஏற்பில் மரபு மீறி இருக்க கூடாது. அதிகாரிகள் தெரிந்து செய்கின்றனரா ? தெரியாமல் செய்கின்றனரா என தெரியவில்லை.  கோவையில் தீவிரவாத செயல்பாடுகளில்  இருப்பவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...