ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 22வது ஆலோசனைக் கூட்டம் நிறைவு

நாட்டில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களையவும், வர்த்தகர்களுக்கும் வர்த்தகச் சந்தைக்கும் ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றுவதற்காகவும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியும் ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சனைகளை முழுமையாகவும், விரைவாகவும் களையப்படும் என அண்மையில் உறுதி அளித்திருந்தார். 

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இன்றைய (06.10.2017) கூட்டத்தில் மாதந்தோறும் வரி தாக்கல் செய்யப்படுவதற்கு பதிலாக காலாண்டிற்கு ஒருமுறை தாக்கல் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. நிலையான வரி 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட சிறு வியாபாரிகள் composition scheme கீழ் நிலையான வரியை செலுத்த வேண்டிய அளவீட்டை உயர்த்தவும், தற்போது நடைமுறையில் உள்ள ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம், ஜிஎஸ்டி பதிவு செய்யாத வியாபாரிகள் பயன்படுத்த 31.08.2018 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் மூலம் வரியை செலுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...