மகளிர் சுயஉதவி குழுவினர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் ஊர்தி சேவை கோவையில் துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 6) மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், ஊட்டச்சத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நபார்டு நிதியுதவியின் மூலம் நடமாடும் விற்பனை ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு பொதுமக்களின் நலன்காக்க பல்வேறு சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது. கால மாற்றத்திற்கேற்றவாறு உணவு பழக்கங்களும் மாற்றம் பெற்றதோடு மனிதனின் ஆரோக்கியமும் குன்றி வருகின்றது. இன்று நிலவி வரும் வாழ்வாதார நோய்களை தவிர்க்கவும், உடல் நலத்தை காக்கவும் சிறுதானியம் சிறப்புணவாக இடம் பெறுகிறது.

மக்களின் உணவு பழக்கங்களை மாற்றம் செய்யவும், இழந்த ஆரோக்கியத்தினை மீட்டெடுக்கவும், சிறுதானியங்களான வரகு, சாமை, திணை, குதிரைவாலி ஆகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காலை மதிய உணவு வகைகள் சத்துமாவு உள்ளிட்டவைகள் இந்த வாகனத்தின் மூலம் பொதுமக்களிடையே விற்பனைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது. 

மேலும் பழங்களால் தயாரிக்கப்பட்ட பழரசங்கள், கேண்டிகள், காய்களை மூலப்பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகள் மசாலப்பொடிகளும் விறப்பனை செய்யப்படுகின்றது. மகளிர் சுய உதவிக்குழுவினரால் விற்பனை செய்யப்படுவதால் பெண்கள் சுயசார்பு அடையும் வகையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், இயற்கை முறையில் வீட்டு முறைப்படி தயாரிக்கப்படுவதால் அனைவரும் விரும்புகின்ற உணவாகவும் கண்டிப்பாக இவை விளங்கும்.

இவ்வாகனத்தின் மூலம் விற்பனை செய்யும் இடங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்ச்சியும், செயல் விளக்கமும் மற்றும் உணவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றது. 

இதற்கான சிறப்பு பயிற்சிகளும், வழிமுறைகளும் விற்பனையில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் வசீகரன், உணவியல் நிபுணர் சரஸ்வதி ஆகியோர் உள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...