கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கிராமம் பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் உள்ளது. இதனையொட்டி, கோவை வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வந்து செல்கின்றன.
தற்போது, பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தின் ஜுரோ பாயிண்ட் பகுதியில் சிவப்பு நிற தலையை கொண்ட ராஜா கழுகுகள் வருகை தந்துள்ளன. அதனை, பொதுப்பணித்துறையின் உதவி நிர்வாக பொறியாளர் நிதியன் புகைப்படம் எடுத்துள்ளார். அதில், ராஜா கழுகுகள், இறந்த மானின் உடலை தின்று கொண்டிருந்தது பதிவாகியுள்ளது.
கழுகுகளின் வருகையால் வளமான வனப்பகுதியை குறிக்கும் என்ற நிலையில், சுற்றுவட்டாரப்பகுதியான சத்தியமங்கலத்தின் மோயர் பள்ளத்தாக்கு, புலிகள் சரணாலயம் மற்றும் பிற பகுதிகளிலும் இவைகள் பெரிதும் காணப்படுகின்றன. மனிதர்களின் ஆதிக்கம் இல்லாத இந்த பகுதியில், பல்வேறு இடங்களில் இருந்து வரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வரத்து அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தில் தண்ணீரின் அளவால் இயற்கை எழிலகு பொழிந்து காணப்படும் வேளையில், வன விலங்குகளின் வருகையும் அதிகரிக்கிறது. ஏற்கனவே, யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, மற்றும் செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வந்த வண்ணம் உள்ளன.
பல்வேறு விலங்குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் ராஜா கழுகுகளும் முகாமிட்டுள்ளதால், பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் பகுதியை விரைவில் சுற்றுலாத் தளமாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.