தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இந்தியா தபால் நிலையத்திற்கு சொந்தமான 42 சென்ட் காலியிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதர்கள் மண்டியும், குப்பைகுளமாகவும் அந்த இடம் காட்சியளித்து வந்தது. 

இந்த நிலையில், பசுமை இந்தியாவாக மாற்றும் முயற்சியில் தபால்துறையும், கோவை லயன்ஸ் கிளப்பும் இணைந்து, தபால் நிலையத்திற்கு சொந்தமான காலியிடத்தில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் 300 மரக்கன்றுகளை நடும்பணி தொடங்கியது. கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் தலைமையில் அதிகாரிகள் சாரதா சம்பத், சித்ராதேவி உள்பட பலர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் பேசுகையில், தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களும் அவர்களால் முடிந்த மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிட்கோ பகுதியில் தபால்நிலையத்திற்கு சொந்தமான உள்ள 25 சென்ட் காலியிடத்தில் சுத்தம் செய்யப்பட்டு, 110 மரக்கன்றுகள் நடப்பபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...