நீலகிரியில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று (04.10.2017) நடைபெற்றது இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெற்றுக் கொண்டார். 

மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ”தூய்மையே சேவை” இயக்கத்தின் கீழ் நடந்த பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

இதைத் தொடர்ந்து, உதகை பிரிக்ஸ் பள்ளியில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அதிகாரங்களும், கடமைகளுக்கான சிறப்புத் தேர்வை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.  இந்த நிகழ்ச்சிகளில்  மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...